Author சுரேஷ் பிரதீப்

அபி – கடிதங்கள் 2

அபி-சிறுகதை அன்பு சுரேஷ் பிரதீப்பிற்கு, நலமா? அபி சிறுகதை வாசித்தேன். நன்றாக இருந்தது. அக சிக்கல்களை அழகியலோடு சொல்லியிருக்கிறீர்கள். உரையாடல்களும் சம்பவங்களும் யாருக்கிடையே இடம் பெறுகின்றன என்பதை விளக்காதிருந்ததே கதையை மேலும் உன்னிப்பாக வாசிக்க தூண்டியது. அபி என்னும் கதை என்ற ரீதியில் பார்க்கையில் சிறப்பாகவே இருந்தது ஆயினும் ஏற்கனவே உங்கள் கதைகளின் சாயல் இதிலும்… Continue Reading →

அபி – ஒரு கடிதம்

அபி – சிறுகதை அன்பின் சுரேஷ் இன்று எதேச்சையாக உங்களின் வாட்ஸ் அப் ஸ்டேடஸ் பார்க்கையில் ‘அபி’ குறித்த லின்க் பார்த்தேன். வேறேதேனும் தலைப்பாக இருந்திருந்தால் பின்னர் கூட வாசித்திருப்பேன் ஆனால் இந்த அபி எனக்கு மிக விருப்பமான பெயர், சங்கமித்ரா, (அக்கா) கருவுற்றிருந்தபோது   அப்பா வீட்டிலிருந்தாள் பிரசவம் வரைக்கும். அப்போது ஷாரூக்கான் முதன் முதலில் சின்னத்திரையில்… Continue Reading →

அபி – கடிதங்கள்

அபி – சிறுகதை அபி நவீன கற்பு உடைந்த சீதை!அவள் ஒரு தொடர்கதை கவிதாவின் நீட்சி!அபி ஶ்ரீராமை மணமுறிவு செய்து விட்டு,சரணுடன் பழகி சரணுடனும் அவள் பிரிவு கொண்டு அவன் திருமணத்துக்கு சென்று வாழ்த்தி விட்டு அர்ச்சானாவிடம் வேலையை விட முடியாது சேஃப்டிக்கு இருக்கட்டும் என கூறுவதில் சேஃப்டி என்பது ஒரு பெண்ணுக்கு வேலையா,இல்லை தன்னை… Continue Reading →

அபி (சிறுகதை)

சலவை செய்யப்பட்ட தூய்மையான வெள்ளைப் படுக்கை விரிப்பின் நறுமணம் அந்த நாளின் தொடக்கமாக இருந்தது. சலவையால் ஏற்பட்ட மொடமொடப்பு நிறைந்த சந்தனநிறப் போர்வையை விளக்கி என்னைப் பார்த்தேன். நேற்று அணிந்திருந்த அதே வெண்ணிறச்சுடிதாருடன் உறங்கிப் போயிருக்கிறேன். என்னுடலின் காய்ந்த வியர்வை மணம் கூட அந்த தூய காலைக்கு ஏதோவொரு கிறக்கத்தை கொடுப்பதாகவே இருந்தது. முகம் மட்டும்… Continue Reading →

திருவாரூர்,வாசகசாலை,நதிக்கரை,வாசிப்பு

நதிக்கரை இலக்கிய வட்டம் என்ற பெயரில் ஒரு நவீன இலக்கிய வாசகர் வட்டத்தை திருவாரூர் மைய நூலகத்தின் உதவியுடன் சில வாரங்களுக்கு முன் தொடங்கினோம். இரு வாரங்களுக்கு முன் இலக்கிய வட்டத்தின் முதல் கூடுகை நடைபெற்றது. மூன்று நண்பர்கள் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்டத்தில் நவீன இலக்கிய வாசிப்பு ரொம்பவும் குறைவு என்ற என் அனுமானத்தை… Continue Reading →

தன்னிலையின் விலகல் – சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘நானும் ஒருவன்’ நூலினை முன்வைத்து

தமிழ்ச் சிறுகதைகளின் இன்றைய வளமான நிலைக்கு பொதுவாகச் சொல்லப்படும் ஒரு காரணம் புதுமைப்பித்தன் தொடங்கி வைத்த பன்முக நோக்கு கொண்ட விரிந்த சிறுகதைத் தளம் என்பது பரவலாக ஒத்துக் கொள்ளப்படும் ஒரு கூற்று. அது உண்மையும்கூட. புதுமைப்பித்தனின் கதைகள் இன்றும் சவால் அளிப்பவையாக, மறுவாசிப்பினைக் கோருகிறவையாக, இருக்கின்றன. அப்படியொரு வலுவான ஆரம்பத்தின் காரணமாக அவருக்குப் பிறகு… Continue Reading →

நதிக்கரை நிகழ்வு ஒன்று – கதிரேசன்

நதிக்கரை இலக்கிய வட்டத்தின் முதல் கூட்டம்   கடந்த ஞாயிறன்று இனிதே நடந்து முடிந்திருக்கிறது .உண்மையில் எதிர்பார்த்ததற்கு மேல் இரு மடங்க்காக ஆட்கள் வந்திருந்தனர் (எதிர்பார்ப்பு இரண்டு,நான் ,சுரேஷ் பிரதீப்,வருகை_நான்கு ). ஒருவருக்கொருவர் அறிமுகம் முடிந்ததும் முதலில் தீவிர இலக்கியத்திற்குள் எவ்வாறு வந்தோம்( மாட்டிக்கொண்டோம்) என்பதைகுறித்து பேச்சு துவங்கப்பட்டது .எளிய தலைப்பாதலால் அனைவாரலும் தயக்கம் இல்லாமல் பேச முடிந்தது  .   நான் ஒன்றாம்… Continue Reading →

நதிக்கரை இலக்கிய வட்டம் நிகழ்வு ஒன்று

2016-ஆம் ஆண்டு விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா தான் நான் கலந்து கொண்ட முதல் பெரும் இலக்கிய நிகழ்வு. அங்கு பல நண்பர்கள் அறிமுகமாயினர். சம்பிரதாய அறிமுகங்களைத் தாண்டி இன்றும் நெருக்கமாகத் தொடரக்கூடிய பல நண்பர்களை அந்நிகழ்வின் வழியாகப் பெற்றேன். ஒளிர்நிழல் வெளியான பிறகு முகநூல் வெளியிலும் பலர் நண்பர்களாயினர். ஆச்சரியம் கொள்ளும் வகையில் இலங்கை… Continue Reading →

446 A – கடிதங்கள்

446 A – சிறுகதை திரு சுரேஷ் அவர்களுக்கு வணக்கங்கள்  446 A – வாசித்தேன் ,  பதின் பருவம் உச்சம் பெரும்  வயதில் ஒரு இளைஞன் மனதில் துளிர்விடும்  , பெண் சார்ந்த இச்சைகளும் , அவள் உடல் சார்ந்து அவனுக்கு ஏற்படும் பருவக் கவர்ச்சியும் , அதன் கொண்டு அவன் சிந்தையில்  ஏற்படும்… Continue Reading →

446 A – கடிதம்

446 A – சிறுகதை அன்பின் சுரேஷ் நலமாக இருக்கிறீர்களா தம்பி ? நேற்றுடன்  கல்லூரி முடிந்து இன்று தேர்வுகள் துவங்கின. காலை மதியம் என எனக்கு இரட்டை  ட்யூட்டி இருந்தது.   காலையில் தேர்வு அறையில் மாணவர்கள் குறித்த நேரத்திற்கு  50 நிமிடங்கள் முன்னரே எழுதி முடித்துவிட்டார்கள். உடன் தரைத்தளத்திற்கு இறங்கி விடைத்தாள்களைக்கொடுக்க அவசரப்படாமல்,காலியாயிருந்த, அந்த தேர்வறையாக மாறியிருந்த வகுப்பறையில் ஒரு… Continue Reading →

« Older posts Newer posts »

© 2026 — Powered by WordPress

Theme by Anders Noren — Up ↑