Author சுரேஷ் பிரதீப்

முடிவின்மையின் ருசி

கண்கொடுத்தவனிதம் அரசினர் தொடக்கப்பள்ளியில் இருந்து தக்களூரின் எல்லையில் இருக்கும் என் வீடு அரை கிலோமீட்டருக்கு சற்று அதிகமான தூரம். நரம்பு பை அல்லது ஒயர் கூடையை தோளில் மாட்டிக்கொண்டு நடந்தபடியே பள்ளி முடிந்து திரும்புபோது நண்பர்களிடம் கதைகளைச் சொன்ன நினைவிருக்கிறது. டைம்மிஷினில் சக்திமானோடு பயணித்ததும் பறக்கும் பாயில் படுத்துறங்கி மொழி தெரியாத தேசத்தில் கண் விழித்ததும்… Continue Reading →

சொட்டுகள் (சிறுகதை)

பக்கெட்டில் தண்ணீர் திறந்துவிட்டு குளிக்க வேண்டும் போலிருந்தது. ஷவர் குளியலை வெறுக்கத் தொடங்கிப் பல நாட்கள் ஆகின்றன. இருந்தும் பக்கெட்டில் தண்ணீர் திறந்துவிட்டால் அது சத்தம் எழுப்பும் என்பதற்குப் பயந்தே ஷவரில் குளித்துக் கொள்வேன். நான் ஆற்றில் குளித்தது கிடையாது. அருவிகளை நேரில்கூடப் பார்த்தது கிடையாது. கொல்லைப்புறத்தில் தன் மகளுக்காக அம்மா அளந்து வைக்கும் தண்ணீர்தான்… Continue Reading →

மனத்திரைகளின் ஆட்டம் – சுரேஷ் பிரதீப் எழுதிய “சொட்டுகள்” – ரா.கிரிதரன் விமர்சனம்

சுரேஷ் பிரதீப்பின் சொட்டுகள் கதையின் நாயகி வளர்ந்து முதல் வேலைக்குப் போகும்வரை ஷவரில் குளித்ததில்லை. பக்கெட்டில் சேர்த்து வைத்த தண்ணீரில் மட்டுமே குளித்துவந்தவள். வேகமாக ஓடும் ஆற்றில், அருவியில் என நீரின் இயல்பான ஓட்டத்துக்குத் தன்னை ஒப்புக்கொடுத்துக்கொண்டது கிடையாது.  அவளது எந்த செயலும் அம்மாவைக் கோபப்படுத்தும். அதற்கான காரணங்கள் கதையில் இல்லாவிட்டாலும் நம்மால் ஊகிக்க முடிகிறது. குடும்ப வாழ்வினால் வீழ்ச்சியைச் சந்தித்த அவளது ஆற்றாமை கரிப்பாக எல்லார் மீதும் முடிகிறது வெளிப்படுகிறது. சிறு… Continue Reading →

சகோதரிகள் , பேசும் பூனை – கதிரேசன்

நதிக்கரை நிகழ்வு நான்கு நதிக்கரை இலக்கிய வட்டத்தின் இம்மாத கூட்டம் நேற்று (10.06.2018) நடைபெற்றது.இக்கூட்டத்தில் சமகால  எழுத்தாளர்களாகிய K N செந்தில்( சகோதரிகள் ) சுனீல் கிருஷ்ணன்( பேசும் பூனை ) ஆகியோருடைய கதைகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சகோதரிகள் குடித்து குடித்து தனக்கு வரும்  பொருளாதார வாய்ப்புகளைக் கூட மறுத்து .இறுதியில் தன் வேலையை ஒழுங்காகச்… Continue Reading →

நதிக்கரை நிகழ்வு நான்கு

பேசும் பூனை இணைப்பு சகோதரிகள் முதல் பகுதி சகோதரிகள் இரண்டாம் பகுதி இலக்கிய வாசிப்பின் ஆரம்ப நிலையில் இருக்கக்கூடியவருக்கு தான் வாசித்த படைப்புகள் குறித்து பேசுவதில் ஒரு தயக்கமும் கூச்சமும் இருப்பது இயல்பு. ஒரு வகையில் அத்தகைய கூச்சம் உடையவர்களில் பெரும்பாலானவர்கள் மிக நுணுக்கமான விஷயங்களைக் கூட அவதானிக்கக்கூடியவர்களாக இருப்பதைக் கண்டிருக்கிறேன். அதோடு அதிகமாக “பேச்சில்… Continue Reading →

எஞ்சி நிற்கும் பாவனைகள்

(ஒளிர்நிழல் நாவலுக்கு மதிப்புரை, எம்.கோபாலகிருஷ்ணன், காலச்சுவடு இதழ், ஜூன் 2018) எதையேனும் சார்ந்திருகவித்துவம், தத்துவம்காதல், சங்கீதம்,இங்கிதம்… இப்படிஎதன் மீதேனும் சாய்ந்திருஇல்லையேல்உலகம் காணாமல் போய்விடும். – வண்ணநிலவன் வாசகனை முதல் வரியிலிருந்தே தன்னுள் அனுமதிக்காத தீர்மானத்தையும் இறுக்கத்தையும் கொண்டுள்ளது சுரேஷ் பிரதீப்பின் ‘ஒளிர் நிழல்’ நாவல். எந்த நொடியிலும் வாசகன் நாவலில் தன்னை மறந்து ஒன்றிவிடக்கூடாது என்ற… Continue Reading →

சூழியல் நூல்கள் சில பரிந்துரைகள்

ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு என் நண்பரும் இலக்கிய வாசகருமான ஜெயவேல் தான் வாசித்த சூழியல் சார்ந்த நூல்களை முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். நான் அப்பட்டியலை என் பக்கத்தில் பகிர்ந்திருந்தேன். நண்பர்கள் பின்னூட்டமாக அவர்கள் வாசித்த நூல்களை தெரிவித்தனர். அவற்றை இங்கு தொகுத்திருக்கிறேன். சில நூல்கள் அச்சில் இல்லை அல்லது நான் தேடிய… Continue Reading →

அள்ளிக் கொடுக்கும் வள்ளலின் கரங்கள்

படையப்பா திரைப்படத்தில் ஒரு காட்சி. ஊர் நிலப்பிரபுவான கதாநாயகனின் அப்பாவுக்கும் அவரின் தம்பிக்கும் இடையே சொத்து தகராறு வரும். தம்பி அண்ணனைப் பார்த்து “ஊர் மரியாதைகள் எல்லாம் உனக்கே கிடைக்கின்றன. நான் ஒரு வேலைக்காரனைப் போல இந்த வீட்டில் இருக்கிறேன். அம்மா உன்னை மட்டும் தான் பெற்றாளா? நான் கூத்தியாளுக்கு (படத்தில் வரும் வார்த்தை. தவறான… Continue Reading →

பேயாய் உழலும் சிறுமனம் – ஒளிர்நிழல் குறித்து செந்தில் ஜெகன்நாதன்

ஒரு செயலும் செய்யாமல் கண்முன்னே கரைந்துகொண்டிருந்த ஒரு முழு நாளின் நுனியில் மனதைச் சமன் செய்ய நண்பனிடம் இருந்து வாங்கி வந்திருந்த ‘ஒளிர்நிழல்’ நாவலை வாசித்தேன். நாவலின் செறிவான மொழியும், அதனுடைய  மீபுனைவு எனப்படும் Meta-fiction வடிவம் மற்றும் சொல்லும் முறை என பல வகைகளில் இந்நாவல் நல்ல வாசிப்பனுபவத்தை தந்தது. நாவலின் பல இடங்களில்… Continue Reading →

சாத்தான்

ஆழத்தில் கிடப்பவன் கூரிய விழிகளால் என்னை பார்த்துக் கொண்டிருக்கிறான் உங்கள் இயல்பின் மீது நான் கருணை கொள்ளும் போது உங்கள் சிரிப்பினைக் கண்டு  எனக்குள் தாய்மை சுரக்கும் போது உங்கள் அழகின்மையை அறிவின்மையை நான் பெருந்தன்மையோடு கடக்கும் போது அவன் கூர்மை சிரிப்பாகிறது எல்லாம் சரியாகும் என்று உங்கள் தலையை நான் தடவும் போது தூய… Continue Reading →

« Older posts Newer posts »

© 2026 — Powered by WordPress

Theme by Anders Noren — Up ↑