Author சுரேஷ் பிரதீப்

குட்டியப்பா – கேப்ஸ்யூல் கதை

காவக்காரன் மேட்டுக்கு போனால்தான் சாமிவரும் என்று மாரிமுத்து குட்டியப்பா சொல்லியபோது அவர் விபூதியடித்தால்தான் வீட்டுக்கு வரமுடியும் என்று மண்டபத்தில் காத்திருக்கும் மணமக்களை எண்ணி பீதி கொண்டு மண்டபத்திற்கு எதிர்திசையில் இருக்கும் மேட்டுக்கு செல்வதற்கு முன் டாஸ்மாக்கில் நிறுத்தி குட்டியப்பாவுக்கு ரொம்பவும் எனக்கு கொஞ்சமும் வாங்கி ஊற்றிக்கொண்டு நூறில் வைத்து வண்டியைத்திருகி குட்டியப்பாவை மேட்டில் இறக்கியதும் குடியாலோ… Continue Reading →

ஈர்ப்பு – சில எதிர்வினைகள்

ஈர்ப்பு கதை இணைப்பு ஈர்ப்பு நெடுங்கதை, தற்கால நவீன வாழ்க்கையின் ஆண், பெண் உறவு நிலைகளின் உளவியல் ரீதியான சிக்கல்களை கூரிய அனுபவச் சித்தரிப்புகளுடன் எழுதப்பட்டிருக்கிறது. கதையின் நாயகன் நடுந்தர வயதை தொடும் வயதில் இருப்பவன். அவனின் வாழ்வில் பெண்கள் அவனை யாரும் பொருட்படுத்தவில்லை. அவனின் பித்தை அறிவை அவர்கள் சுமையாக நினைத்து விலகிவிடுகிறார்கள், ஒவ்வொரு… Continue Reading →

ஈர்ப்பு (சிறுகதை)

கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவன்நற்றாள் தொழார் எனின்? 1 எனக்கு எல்லாமும் தோராயமாகத்தான் நினைவிருக்கிறது. நினைவுகள் வழியாகவே மனிதர்கள் இன்பமும் துன்பமும் அடைவதாகச் சொல்கிறார்கள். அதாவது நினைவு எந்த அளவிற்கு துல்லியமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு இன்பமும் துன்பமும் வீரியத்துடன் வெளிப்படுகிறது. என் நினைவுகளை நான் தொலைத்துவிட்டேன் என்றுதான் நினைக்கிறேன். என் உறவுகளும் நண்பர்களும் என் நினைவில்… Continue Reading →

காலூன்றுதலின் கசப்புகள் – கலாமோகனின் நிஷ்டை சிறுகதை தொகுப்பை முன்வைத்து

நவீனத் தமிழ் இலக்கியத்தில் புலம்பெயர்தல் குறித்த வலுவான பிரக்ஞை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே நிகழ்ந்து விடுகிறது. புதுமைப்பித்தனின் துன்பக்கேணி தேயிலைத் தோட்டம் அமைப்பதற்கென இலங்கைக்கு அழைத்துச் செல்லப்படும் ஒரு பெண்ணைப் பற்றிய கதை. ந.பிச்சமூர்த்தி சி.சு.செல்லப்பா ஆகியோரின் சில கதைகளில்  வடக்கில் இருந்து  தொழில் செய்ய வரும் நாடோடிகள்  பற்றிய குறிப்புகள் வந்துபோகும். அதன்பிறகு இரண்டாம்… Continue Reading →

ஏன் இலக்கியம்?

ஏன் இலக்கியம் வாசிக்கிறீங்க?இலக்கியம் இல்லாமல் மக்கள் வாழ்ந்துகொண்டுதானே இருக்கிறாரகள்.அரசு நடந்து கொண்டுதானே்இருக்கறது. அறிவியல் அறிஞர்கள் கண்டுபடிப்புகளை நிகழ்த்தி கொண்டுதானே இருக்கிறார்கள்.போர் நடந்து கொண்டுதானே இருக்கிறது.வண்புணர்வு நடந்து கொண்டு தானே இருக்கறது.அணு ஆயுத பதட்டம் இருந்து கொண்டதானே இருக்கறது.மக்கள் பசியில் இருந்து கொண்டுதானே இருக்கிறார்கள்.இவற்றுக்கெல்லாம் இலக்கியம் எந்த வகையில் தேவை.உலகம் இருக்க இருக்க பண்பாட்டு ரீதியாக,உறவு ரீதியாக,சுற்றுசூழல்… Continue Reading →

போர்முரசு

பன்னிரெண்டாம் வகுப்பு படித்த போது வேதியியலில் எப்படியும் தேரமாட்டேன் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்ததனால் கமலாயக் கரையில் இருக்கும் வினாயகா டியூஷன் சென்டரில் சேர்ந்தேன். டியூஷன் ஆசிரியர் செந்தில்குமார் வேதியியல் நன்றாக சொல்லிக் கொடுப்பார். சிக்கல் என்னவெனில் காலையில் ஆறு மணிக்கு டியூஷன் தொடங்கும். என் வீட்டிலிருந்து டியூஷன் சென்டர் பதினாறு கிலோமீட்டர். முதல் சில… Continue Reading →

தர்மபுரியில் இரு தினங்கள் – வாசிப்பும் பண்பாடும்

அவதார் படத்தில் இரண்டு கால்களும் செயல்படாத நிலையில் இருக்கும் நாயகனை வேற்றுகிரக வாசியான அவதாரின் உடலில் செலுத்துவார்கள்(பல அறிவியல் விளக்கங்கள் தரப்படும் இந்த “செலுத்துதலை” கூடுவிட்டு கூடுபாய்தல் என்று வைத்துக் கொள்ளலாம). அவதாரின் உடலுக்குள் நம் நாயகன் சென்றதும் முதலில் தன் கால்களைத் தான் கவனிப்பான். கால்களை அசைக்க முடிவதும் நடக்க முடிவதும் அவனுக்கு பெரும்… Continue Reading →

நுண்வெளி கிரகணங்கள்: விலகும் இருள்

(சு.வேணுகோபால் எழுதிய ‘நுண்வெளி கிரகணங்கள் நாவல் விமர்சனம்) சுதந்திரத்திற்குப் பிறகான இந்தியர்களின் வாழ்வில் நிறைய பொதுத்தன்மைகள் ஏற்படத் தொடங்கின. நவீனக் கல்வியும் சந்தையும் ஒரு பொது மொழியையும் பொதுவான மனநிலையையும் மக்களிடையே உருவாக்கத் தொடங்கின. ஒரு வகுப்பறையில் இருக்கும் மாணவர்களிடம் அவர்கள் மாணவர்கள் ஒத்த வயதினர் ஒரே வகையான பாடங்களைப் பயில்கின்றனர் என்ற பொதுத்தன்மைகள் உருவாகின்றன…. Continue Reading →

சில்ற (சிறுகதை)

சில்லறைக் காசுகளை சேமிக்கும் பழக்கம் எப்படி ஏற்பட்டதென நினைவில்லை. ஆனால் நாங்கள் குடியிருந்த பழைய வீட்டில் டி.வி வைப்பதற்காக வீட்டின் வடகிழக்கு மூலையில் நான்கடி அளவிற்கு ஒரு கான்கிரீட் பிளேட்டை நீட்சி போல் செருகி இருப்பார்கள். அந்த பிளேட்டில் வைக்கப்பட்டிருக்கும் ஒளி ஊடுருவ முடியாத கனமான ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் தான் சில்லறைகளை சேர்க்கத் தொடங்கினேன்… Continue Reading →

நதிக்கரை சிறுகதை விவாத நிகழ்வு – கதிரேசன்

நதிக்கரை இலக்கிய வட்டத்தின் ஒரு சிறப்பு கூட்டம் இன்று திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறுகதை வடிவம், சிறுகதைக்கான தோற்றம், ஆரம்ப கால சிறுகதைகள், நவீனத்துவ பின்நவீனத்துவ சிறுகதைகள், அதன் போக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழில் பாரதி தொடங்கி தற்கால இளம் எழுத்தாளர்கள் சிறுகதைகள் வரை பேசப்பட்டன.சிறுகதையின் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்,வளர்ச்சி… Continue Reading →

« Older posts Newer posts »

© 2026 — Powered by WordPress

Theme by Anders Noren — Up ↑