காதல் இலக்கியத்தில் பல்வேறு விதங்களில் சொல்லப்பட்டுவிட்டதாகச் சொல்வார்கள். ஆனால் வாசிப்பு கூடக்கூட ஒரு சில மேதைகளன்றி காதல் யாராலும் சரியாகச் சொல்லப்படவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. கூர்மையும் நுட்பமும் கொண்ட எழுத்தாளன் காதல் என்ற விஷயத்தை அவ்வளவு எளிதில் தன் படைப்பின் பேசுபொருளாக்கி விடுவதில்லை. அவன் அறிவான் காதல் என்ற அந்த மிக எளிய அனைவராலும்… Continue Reading →
2012ஆம் ஆண்டு இளங்கலை பொறியியல் முடித்து என்ன வேலையும் கிடைக்காமல் என்ன செய்வதென்று தெரியாமல் கல்லூரியைவிட்டு வெளியேறி வீட்டில் கிடந்த சமயம் அண்ணன் ஆசிரியராக பணிபுரிந்த ஓஎம்டி மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் சில மாதங்கள் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு இயற்பியல் பாடம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்பள்ளியில் இயற்பியல் பாடமெடுத்த ஆசிரியர் எதிர்பாராத விடுப்பில் சென்றிருந்ததாலும்… Continue Reading →
பெருங்கதையாடல்கள் மீது பின்நவீனத்துவர்களுக்கு ஒருவித விலகலான பார்வை இருக்கும். அதற்கு அவர்கள் சொல்லும் காரணத்தை இவ்வாறாக தொகுத்துக் கொள்ளலாம். பேரரசுகளும் ஏகாதிபத்திய அரசுகளும் பெருங்கதையாடல்கள் மீதே தங்களுடைய அடித்தளங்களை அமைத்தன. அக்கதையாடல்களை மக்களை நம்பச் செய்ததன் வழியாக அவர்களை முடிவில்லாமல் சுரண்டி சமூகத்தின் மிகச்சிறு பகுதியினர் மட்டுமே நலம்பெறும்படியான ஒரு அரசினை ஏகாதிபத்தியங்கள் அமைத்துக் கொண்டன…. Continue Reading →
நதிக்கரை இலக்கிய வட்டத்தின் இம்மாதக் கூட்டம் இன்று (30.12.2018) திருவாரூர் மாவட மைய நூலகத்தில் நடைபெற்றது. இம்முறை இளம் எழுத்தாளராகிய அரவிந்தனின் சீர்மை நாவல் பேசுவதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இச்சிறுநாவல் கென் வில்பர் என்ற அறிஞனின் வாழ்க்கையை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு வகையான Biographical fiction. தன் வாழ்வின் முப்பது வயதுவரை மற்றவர்களைப் போல் வாழ்ந்து… Continue Reading →
கிழக்குப் பதிப்பக வெளியீடாக வரவிருக்கும் என் இரண்டாவது சிறுகதை தொகுப்புக்கான முன்னுரை கரைசேர்ந்தவை பியோதர் தஸ்தாவெய்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவல் குறித்து செப்டம்பர் 2017ல் என் தளத்தில் ஒரு கட்டுரை எழுதினேன். அக்கட்டுரை வெளியான அன்றே எழுத்தாளர் கே.என்.செந்தில் அலைபேசியில் தொடர்பு கொண்டார். இரண்டாயிரத்துக்குப் பிறகு எழுத வந்த எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் என நான்… Continue Reading →
அன்பின் சுரேஷ் இரண்டு நாட்களுக்கு முன்னர் ”வீதிகள்” வாசித்தேன். ஒருமுறை வாசித்தபின்னர், கதைக்குள் எதையோ தவறவிட்டது போலிருந்தது, இன்று அடுத்த வகுப்பிற்கான இடைவெளியில் மீண்டும் வாசித்தேன். கொங்குபிரதேசத்தில் கேள்விப்பட்டிராத ஊர்களின் பெயர்களினாலேயே புதியதாய் ஒரிடத்திற்கு செல்லும் கிளர்ச்சியை பதட்டத்தை எப்போதுமுங்கள் எழுத்து உருவாக்கும். இதிலும் அப்படியே! அறிமுகமான இடங்களின் பரிச்சயத்தன்மையினாலும் சில எழுத்துக்களுடன் அணுக்கமுண்டாகும் எனினும் நீங்கள்… Continue Reading →
சுரேஷ் பிரதீப் அவர்களின் ” வீதிகள் ” சிறுகதை குறித்து ஒரு பார்வை : பிரவீணா, அனிதா என்ற இரு பெண்களுக்குள்ளாக நிகழும் தன்முனைப்பு (Ego) , மனவிகல்பம், பொறாமை, இருவரில் யார் வாழ்க்கை நிறையானது, யார் பெரியவர் என மனம் எழுப்பும் பெண்களின் ஆழ்மன உளவியலைப் பேசுகிறது இச்சிறுகதை. பிரவீணா ஜி.ஆர்.எம் பள்ளியில் பத்தாம்… Continue Reading →
இயல்புவாதம் என்ற இலக்கியப் போக்கின் துவக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேற்கில் நிகழ்கிறது. சுருங்கச் சொன்னால் இயல்புவாதம் வாழ்வு தாண்டிய அதீதங்களான மன உச்சங்களான கடவுள், ஆன்மீகம், காதல் போன்றவற்றை முற்றாகத் தவிர்த்துவிட்டு எழுதப்படும் ஒரு புனைவு வகை. ஸ்பீல்பர்க் இயக்கிய Lincoln திரைப்படத்தில் இறுதிக்காட்சிக்கு சற்று முன்னர் Lincoln சொல்வதாக ஒரு வசனம் வரும். “உங்கள்… Continue Reading →
சுசித்ராவிடம் இரண்டு ஜோடி காலணிகள் உள்ளன. ஒன்று நேரடியாக செருப்பின் அடிமுனையில் இருந்து கால்களை நுழைத்து போட்டுக்கொள்வது. அந்தக் காலணிகள் வெண்மையும் மஞ்சளும் கலந்தது போன்ற நிறத்திலானவை. அடிப்பகுதிக்கு சற்று மேலிருந்து கட்டைவிரலையும் மற்ற விரல்களையும் பிரிக்கும் இடத்துக்கு இரண்டுபக்க வார்களும் வந்துசேரும். அவ்விடத்தில் சிறிய கருநிற பளிங்கால் செய்யப்பட்ட ஒரு மூன்றிதழ் பூ பளபளக்கும்…. Continue Reading →
நிறுவனத்தில் பணமோசடி செய்து தப்பிவிட்ட க்ரகர் சேம்சாவின் மனசாட்சியாக அந்தக் கரப்பான்பூச்சியை உருவகித்தால் அவனை நம்மால் மேலும் நன்றாக அணுகி அறிய முடிகிறது. கரப்பானாக மாறிய அவனை அவன் தந்தை மிரட்டி அறையில் போட்டு அடைக்கிறார். அவன் அன்னை அன்றாடத்தில் ஏற்படும் எதிர்மறை சலனங்களை தாங்கிக் கொள்ள இயலாதவளாக மகனின் நிலையை எண்ணி செயலற்றுப் போகிறாள்…. Continue Reading →
© 2026 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑