1 சுபத்ரா பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தாள். அப்பாவின் என்ஃபீல்டு வீட்டு வாசலுக்கு வரும் சத்தம் துல்லியமாகக் கேட்டதும் கைகளில் ஒரு மெல்லிய நடுக்கம் ஓடியது. இப்போது அவளுக்கு இருபத்திமூன்று வயது. பட்டப்படிப்பு முடிக்க முடியவில்லை. அவள் வகுப்பில் அவள் ஒருத்திதான் பட்டப்படிப்பு முடிக்காதவள். அப்பாவுக்கு அவள் பட்டம் வாங்கவில்லை என்று தெரிந்தும் அவர் எதுவும் சொல்லவில்லை…. Continue Reading →
என் ஞாபக மறதியை நொந்து கொண்டு எழுதத் தொடங்குகிறேன். கொஞ்சநாள் முன் ஒரு எழுத்தாளருடன் பேசினேன். அவர் பெண். பேச்சு தமிழ்க் கதைகளில் உள்ள பாலியல் மீறல்கள் குறித்த சித்திரம் பற்றிச் சென்றது. அவர் பெயர்தான் மறந்துவிட்டது. அவர் சொன்னது நினைவிருக்கிறது. ‘என்னுடைய பாட்டியை நான் கடுமையான ஒழுக்க நெறி கொண்டவர் மீறல்களை மன்னிக்காதவர் என்றுதான்… Continue Reading →
சமீபத்தில் என் நண்பர் ஒரு மாவட்ட மைய நூலகத்துக்குச் சென்றிருக்கிறார். எந்த மாவட்டம் என்ற தகவலை நான் சொல்லப் போவதில்லை. சம்மந்தப்பட்ட நூலகருக்கே அது பிரச்சினையாக முடியலாம் என்பதாலும் அதோடு என் நண்பர் சந்தித்த அனுபவம் இன்று தமிழகம் முழுவதும் நூலகங்களில் ஒரு கலாச்சாரமாகவே பரவி இருப்பதாலும் தனிப்பட்ட தகவல்கள் இன்றி தொடர்கிறேன். முதலில் நண்பரைப்… Continue Reading →
பேராசிரியர் டி.தருமராஜ் ‘நாயாட்டு’ என்ற புகழ்பெற்ற மலையாளப்படம் பற்றி எழுதிய கட்டுரையில் அப்படத்தில் தலித் என்ற அடையாளம் கதையோட்டத்தை விறுவிறுப்பாக்கும் அரசியல் உத்தியாக மட்டுமே மாறிப்போயிருக்கிறது என்பதை எடுத்துச் சொல்லி இருப்பார். இத்தனைக்கும் அதிகாரம் செயல்படும் விதம் குறித்து மிகக்கூர்மையான விமர்சனத்தை முன்வைக்கும் படம் அது. படத்தின் முடிவில் ‘பலிகடா’ ஆவதும் ஒரு தலித்தான். ஆனால்… Continue Reading →
1 அப்பா இதையெல்லாம் விரும்பி இருக்கமாட்டார். அப்பா இறக்கும்வரை தன் இந்து மத நம்பிக்கைகளைக் கைவிடவில்லை. ஆனால் அம்மா அவ்வளவு ‘கிறிஸ்துவராக’ இருந்தது இல்லை. வீட்டில் எனக்கு எதைத் தேர்ந்தெடுக்கவும் உரிமை இருந்தது. ஆனால் நான் எதையுமே தேர்வு செய்யவில்லை. என் விருப்பம் மொழியில்தான் இருந்தது. மொழியென்றால் பேச்சுமொழி, நிரல் மொழி இரண்டிலும்! அப்பாவுக்கு முன்னதில்தான்… Continue Reading →
நேற்று அஞ்சனாவின் பிறந்தநாள். அவளுக்குப் பரிசாக அளிக்க என்னிடம் சொற்கள்தான் உள்ளன. அஞ்சனம் என்றால் கண்களை துலக்கமாகக் காட்டும் மை. இக்கவிதைகள் அவளுக்கு அஞ்சனம். 1 கொழுப்பு பாப்பாக்குட்டி பட்டுக்குட்டி பன்னிக்குட்டி குல்கந்து குட்டி என்றெல்லாம் குழந்தையைக் கொஞ்சியவன் எல்லாவற்றிலும் ‘குட்டி’ சேர்த்துக் கொள்கிறான் டிஃபன் குட்டி சோபாக்குட்டி ஆஃபீஸ் குட்டி இறுதியாக எதையோ தீவிரமாக… Continue Reading →
காலச்சுவடு இதழில் வெளியான கட்டுரை எழுத்தாளர் இராசேந்திர சோழன் கடந்த மார்ச் 1 (2024) அன்று காலமானார். பொதுவாக ஒரு படைப்பாளியின் மறைவை ஒட்டி அவர் சார்ந்து பகிரப்படும் நினைவுகள், அவர் படைப்புகளை மதிப்பிட்டு வெளியிடப்படும் கட்டுரைகள் முக்கியமானவை. முதல் வகை எழுத்துகள் எழுத்தாளரின் தனிப்பட்ட ஆளுமை சார்ந்த புரிதலை உருவாக்குவதன் வழியாக வாசகர்கள் அவரை… Continue Reading →
தயிர்க்காரி சுவரில் புள்ளி போடுகிற மாதிரி, நாமாகக் கற்பனை பண்ணிச் சொல்லிக்கொள்ளும் ஞாயிறு, திங்கள், செவ்வாய்க் கிழமைகள் எல்லாம் அடிப்படையில் ஒன்றுதானே. பிளவு – பின்னம் விழாமல் இழுக்கப்பட்டுவரும் ஒரே கம்பி இழையின் தன்மைதானே பெற்றிருக்கின்றது. இல்லை – இல்லை. சிலந்திப் பூச்சி தனது வயிற்றிலிருந்து விடும் இழை போல நீண்டுகொண்டே வருகிறது. இன்று –… Continue Reading →
1 இத்தளத்தின் நோக்கம் என்ன? நான் ஏற்கனவே sureshezhuthu.blogspot.in என்ற பெயரில் ஒரு வலைப்பூவில் அவ்வப்போது எழுதுகிறேன். அவ்வப்போது வாசிக்கும் நூல்கள் குறித்த குறிப்புகளையும் பொதுவான விஷயங்கள் பற்றியும் என் பேஸ்புக் பக்கத்திலும் வாட்ஸ்அப் சேனலிலும் எழுதுகிறேன். அப்படி இருக்க இப்படியொரு தளத்தின் தேவை என்ன? வலைப்பூவைவிட சற்றுக் கூடுதல் வசதிகள் வலைதளத்தில் உண்டு. அதோடு… Continue Reading →
சொற்சுவை – புத்தாண்டு கவிதை வாசிப்பு – 2025
© 2026 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑